தென்கொரியா விளையாட்டு வீரர்களின் பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கைகள் தொடர்பிலான மிகப்பெரும் விசாரணையொன்றை ஆரம்பிக்கவுள்ளது.

தென்கொரியாவின் ஒலிம்பிக் பதக்க வீராங்கனையொருவர் தனது முன்னாள் பயிற்றுவிப்பாளர் மீது பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதை தொடர்ந்து மேலும் பல வீராங்கனைகள் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்

இந்நிலையிலேயே அந்த நாட்டின் மனித உரிமை கண்காணிப்புகுழு இது குறித்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது

உண்மைகளை வெளியில் தெரிவித்தால் தங்களிற்கான வாய்ப்பு பறிபோகும் என்ற அச்சத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பல தலைமுறைகளாக மறைத்துவைத்திருந்த விளையாட்டுகளில் பாலியல் துஸ்பிரயோம் குறித்த தகவல்களை வெளிக்கொணர்வதற்காக  இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன என தேசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது

மிகப்பெரிய விசாரணையை மேற்கொள்வோம் என தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின்  ஆணையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுவீரர்கள் பயிற்றுவிப்பாளர்கள் உட்பட 30,000 பேரை விசாரணை செய்யவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிம்சுக் ஹீ என்ற 21 வயது ஓலிம்பிக் பதக்க வீராங்களை தனது பயிற்றுவிப்பாளர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய பின்னரே விளையாட்டில் பாலியல் துஸ்பிரயோகம் குறித்த சர்ச்சை மூண்டுள்ளது.

குறிப்பிட்ட பயிற்றுவி;ப்பாளர் பயிற்சியின் போது தங்களை தாக்கினார் என இரு வீராங்கனைகள் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளதை தொடர்ந்து அவர் ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.