“MA’s Kitchen” என அண்மையில் வர்த்தக குறியிடப்பட்ட Ma’s ஃபூட்ஸ் புரொசஸிங்(பிரைவட்) லிமிடெட் நிறுவனம், மினுவங்கொட பிரதேசத்திலுள்ள பொல்வத்த ஸ்ரீ ரத்னசரா மத்திய கல்லூரியின் மனையியல் அறையினை மறுசீரமைத்து பாடசாலையிடம் கையளித்திருந்தது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக நெதர்லாந்து நாட்டில் தரமான சான்றளிக்கப்பட்ட சேதன உற்பத்திகளை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் நிறுவனமும், Ma’s ஃபூட்ஸ் நிறுவனத்தின் நீண்டகால வெளிநாட்டு வாடிக்கையாளருமான DO-IT நிறுவனத்தின் ஸ்தாபகரும், புகழ்பெற்ற சமையற்கலை நிபுணருமான பொப்பே ப்ராம் கலந்து கொண்டிருந்தார்.
மினுவங்கொட கல்வி வலயப் பணிப்பாளர், ஃபூட்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
“700 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் மினுவங்கொட பொல்வத்த ஸ்ரீ ரத்னசர மத்திய கல்லூரியின் மனையியல் அறையை புதுப்பித்ததையிட்டு Ma’s ஃபூட்ஸ் நிறுவனம் மிகவும் மகிழ்ச்சியடைகிறது.
இந்த புதிய மனையியல் அறை ஊடாக ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலரும் தமது சமையல் திறன்களை விருத்தி செய்யவும், உணவுத்துறையில் அவர்களது தொழில் அபிலாஷைகளை நிவர்த்தி செய்யவும் முடியும் என நாம் எண்ணுகிறோம்” என Ma’s ஃபூட்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மரியோ டி அல்விஸ் தெரிவித்தார்.
“தொழில் வாய்ப்புகளுக்கு மேலதிகமாக, அடிப்படை சமையல் திறனை மாணவ, மாணவிகள் கொண்டிருக்க வேண்டியமை அத்தியாவசியமான வாழ்க்கை பாடமாகவுள்ளது. சிறந்த உணவு தெரிவுகளை ஊக்குவிக்கவும், குடும்பமாக உணவினை பகிர்ந்து சமைப்பதனூடாகவும் குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை விருத்தி செய்யும் நோக்கிலேயே Ma’s Kitchen உருவாக்கப்பட்டுள்ளது” என அல்விஸ் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் தொடக்க தினத்தன்று ஸ்ரீலங்கா எயார்லைன் கேட்டரிங் சேர்விஸ் நிறுவனத்துடன் இணைந்து Ma’s ஃபூட்ஸ் நிறுவனம் சமையல் செயலமர்வொன்றினை முன்னெடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்தியிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM