2018 ஆம் ஆண்டுக்கான 11 பேர் கொண்ட ஐ.சி.சி.யின் டெஸ்ட் கிரிக்கெட் கனவு அணியை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

குறித்த இக் கனவு அணியில் இலங்கை அணியின் வீரர் இடது கை துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்னவும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

அதன்படி விராட் கோலி தலைமையிலான இந்த டெஸ்ட் அணியில் நியூஸிலாந்து டொம் லாதம், திமுத் கருணாரத்ன, கேன் வில்லியம்சன், விராட் கோலி, ஹேன்றி நிக்கோலஷ், ரிஷாத் பந்த், ஜேசன் ஹோல்டர், ரபடா, நெதன் லியோன், பும்ரா மற்றும் மொஹமட் அபாஸ் ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.