நாடளாவிய ரீதியில் சேனா படைப்புழுக்களின் தாக்கம் அண்மைக்காலமாக வெகு தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது.

நாட்டில் சோளம் பயிர்செய்கையை தாக்கியுள்ள இந்த படைப்புழுவானது சுமார் 100 வகையான பயிர்செய்கைகளையும் தாக்க கூடும் எனவும் விவசாய அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதேவேளை படைப்புழுவின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்திருந்தது.

இந் நிலையில், சேனா படைப்புழு தாக்கத்தால் சேதமடைந்த பயிர்களுக்காக 250 மில்லியன் ரூபா நட்டஈடு வழக்க அமைச்சரவை இன்று (22) அனுமதி அளித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.