புதிய அர­சி­ய­ல­மைப்பு என்ற விட­யத்­தினை வைத்து தற்­போது ஓர்அர­சியல் சூது விளை­யாட்டே நடை­பெ­று­கின்­றது. கூட்­ட­மைப்­பினர் தமிழ் மக்­க­ளையும், ராஜ­பக் ஷ, மைத்­திரி தரப்­பினர் சிங்­கள மக்­க­ளையும், ஐ.தே.க.வினர் மேற்­கு­ல­கத்­தி­னையும் ஏமாற்­று­கின்­றார்கள் என்­பதே யதார்த்தம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சா­ர ­செ­ய­லா­ளரும், கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜி­த்த ­ஹேரத், வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யின்­போது தெரி­வித்தார். 

அவர் வழங்கிய ­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு, 

கேள்வி:- நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு அவ­சியம் என்ற நிலைப்­பாட்டில் ஜே.வி.பி தற்­போதும் இருக்­கின்­றதா?

பதில்:- புதிய அர­சி­ய­லமைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் தான் ஜே.வி.பி. உள்­ளது. புதிய அர­சி­ய­ல­மைப்பில் மிக முக்­கி­ய­மாக நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை ஒழிக்­கப்­பட வேண்டும், புதிய தேர்­தல்கள் முறை­மை உள்­ள­டக்­கப்­பட வேண்டும், தேசிய பிரச்­சி­னைக்கு ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்வு உள்­வாங்­கப்­பட வேண்டும், அடிப்­படை உரி­மைகள் உச்­ச­பட்சம் பாது­காக்­கப்­பட வேண்டும் உள்­ளிட்ட விட­யப்­ப­ரப்­புக்­களை  கொண்ட புதிய அர­சி­ய­ல­மைப்பு அவ­சி­ய­மா­கின்­றது. அதனால் தான் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும் செயற்­பாட்­டிற்கு முழு­மை­யான ஆத­ர­வி­னையும், ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் வழங்­கி­யி­ருந்தோம்.  

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தின் தற்­போ­தைய நிலைமை என்ன?

பதில்:- மூன்று வரு­டங்­க­ளாக செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தாலும் புதிய அர­சி­ய­ல­மைப்புச் சட்­ட­மூல வரைவைக் கூட உரு­வாக்க முடி­ய­வில்லை. அதற்­கான ஏகோ­பித்த தீர்­மா­னத்­தி­னையும் ஏற்­ப­டுத்த முடிந்­தி­ருக்­க­வில்லை. இவ்­வா­றான நிலையில் இதற்கும் அப்பால் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை இந்­தப் ­பா­ரா­ளு­மன்ற காலத்தில் உரு­வாக்க முடியும் என்ற நம்­பிக்கை எமக்கு இல்லை. பாரா­ளு­மன்­றத்தில் சம­கா­லத்தில் காணப்­படும் நிலை­மை­க­ளுக்கு அமை­வாக பார்க்­கின்­ற­போது அச்­செ­யற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் நிலை­மைகள் இல்லை. 

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான நிபுணர் குழு அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது­கு­றித்த தங்­களின் நிலைப்­பாடு என்ன?

பதில்:- வழி­ந­டத்தல் குழுவில் கலந்­து­ரை­யா­டி­ய­வற்றில் சில விட­யங்­களை உள்­ள­டக்கி நிபு­ணர்­களின் கருத்­துக்­க­ளையும் கொண்ட அறிக்­கை­யாக உள்­ளது. அது வெறு­மனே அறிக்­கை­யொன்­றாகும். அது சட்­ட­மூலம் அல்ல. அதில் உள்ள பல விட­யங்கள் குறித்து கட்­சி­க­ளி­டையே ஏகோ­பித்த நிலைப்­பாடு இல்லை. ஆகவே நிபு­ணர்­குழு அறிக்­கையில் விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தாலும் புதிய அர­சி­யல­மைப்பு வரை­யப்­ப­டப் ­போ­வ­தில்லை.

கேள்வி:- எதிர்­கா­லத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தாக இருந்தால் வழி­ந­டத்தல் குழுவில் ஏகோ­பித்த தீர்­மா­னத்­தினை எடுக்க முடியும் என்று நம்­பு­கின்­றீர்­களா?

பதில்:- இல்லை, நீங்கள் குறிப்­பிட்ட இந்த விட­யத்தில் தான் பிரச்­சி­னைகள் உள்­ளன. கடந்த மூன்று வரு­டங்­களில் சில சொற்­றொ­டர்கள் தொடர்பில் கூட ஏகோ­பித்த நிலைப்­பாடு எடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. அத்­த­கைய சொற்­றொடர் தொடர்பில் தற்­போதும் முரண்­பா­டான நிலை­மை­களே உள்­ளன. எதிர்­கா­லத்­திலும் அவை தொடர்பில் இணக்­கப்­பாடு ஏற்­படும் என்று கூற­மு­டி­யாது. வழி­ந­டத்தல் குழுவில் ஏகோ­பித்த நிலைப்­பாட்டின் அடிப்­ப­டையில் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பது என்­பது இய­லாத காரி­ய­மா­கின்­றது. 

கேள்வி:- அப்­ப­டி­யென்றால் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை அடுத்த கட்­டத்­திற்கு கொண்டு செல்ல முடி­யாது என்­கின்­றீர்­களா? 

பதில்:- இல்லை, வழி­ந­டத்தல் குழு தற்­போ­து­வ­ரையில் 83அமர்­வு­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றது. அத்­த­கைய தரு­ணங்­களில் ஒரு சொற்­றொடர் குறித்து மட்­டுமே கலந்­து­ரை­யா­டிய சந்­தர்ப்­பங்­களும் உள்­ளன. தற்­போ­தைய சூழலில் கலந்­து­ரை­யா­டலின் பிர­காரம் ஏகோ­பித்த நிலைப்­பா­டட்டினை எட்டி, அதன் பிர­காரம் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்குதல் என்­பது செயற்­பாட்டு ரீதி­யாக முன்­னெ­டுக்க முடி­யா­த­வொன்­றா­கி­றது. எனவே அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல மைப்­புக்­கான சட்­ட­மூல வரை­வினை தயா­ரித்து பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கின்­ற­போது இணக்­கப்­பாடு காணப்­ப­டு­கின்ற விட­யங்­களை ஏற்­றுக்­கொள்­கின்ற அதே­நேரம், இணக்­கப்­பா­டற்ற விட­யங்கள் தொடர்பில் எமது கருத்­துக்­களை முன்­வைக்க முடியும். அத­ன­டிப்­ப­டையில் அடுத்­த­ கட்டம் நோக்கி நக­ரலாம்.

கேள்வி:- நீங்­களும் புதிய அர­சி­ய­லமைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பினர் என்ற வகையில் கடந்த கால செயற்­பா­டு­களில் பிர­தான அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகளின் பங்­க­ளிப்பு எவ்­வாறு இருந்­தது?

பதில்:- பிர­தான கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளி­டத்தில் உண்­மை­யான, நேர்­மை­யான பங்­க­ளிப்பு இருந்­தி­ருக்­க­வில்லை. புதிய அர­சி­ய­ல­மைப்புச் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐ.தே.க.வினர் மேற்­கு­ல­கத்­திற்கு காண்­பிப்­ப­தற்கே முயன்­றார்கள். தம்மால் தான் இச்­செ­யற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்று தமிழ் மக்கள் மத்­தியில் வகை­கூறி அம்­மக்­களின் ஆத­ர­வைப்­பெ­றவே கூட்­ட­மைப்­பினர் முயற்­சித்­தார்கள். சு.க.வும், மஹிந்த தரப்­பி­னரும் எதிர்ப்­பினை வெளி­யிட்டு மக்கள் ஆத­ரவைப் பெற முயற்­சித்­தார்கள். இத்­த­ரப்­புக்­க­ளுக்கு உண்­மை­யான விருப்பு இருந்­தி­ருந்தால் தற்­போ­தைய நிலைமை ஏற்­பட்­டி­ருக்­காது. மூன்று வரு­டங்­களும் காலம் கடத்­தப்­பட்­டி­ருக்­காது. 

கேள்வி:- அவ்­வா­றாயின், பெப்­ர­வரி 4ஆம் திக­திக்கு முன்­ன­தாக புதிய அர­சி­ய­ல­மைப்பு சட்­ட­மூல வரைவு தயா­ரிக்­கப்­படும் என்று எந்த அடிப்­ப­டையில் நம்­பிக்கை அளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது?

பதில்:- எதிர்­கா­லத்தில் மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அச்­ச­ம­யத்தில் வட­மா­காண சபைக்­கான தேர்­தலும் நடை­பெ­ற­வுள்­ளது. தமிழ் மக்­களின் ஆத­ரவைப் பெறு­வ­தற்­காக 'எமது தலை­யீ­டு­க­ளினால் தான் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது' என்ற செய்­தியை வழங்க வேண்­டிய தேவை கூட்­ட­மைப்­புக்கு உள்­ளது. அதனால் தான் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் பெப்.4இற்கு முன் அர­சி­ய­ல­மைப்பு சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­படும் என்று கூறு­கின்றார்.

மஹிந்த ராஜ­பக் ஷ தரப்­பினர், அதி­க­ார­ வேட்­கையால் 'புதிய அர­சி­ய­லமைப்பில் சமஷ்டி உள்­ளது, அது அமு­லானால் நாடு பிள­வ­டை­யப்­போ­கின்­றது' என்று உரு­வாக்­கப்­ப­டாத அர­சி­ய­லை­மைப்­பினை வைத்து தென்­னி­லங்கை சிங்­கள மக்கள் மத்­தியில் இன­வா­தத்­தினை கக்கி பிர­சாரம் செய்­கின்­றனர். அதே­நேரம், ரணில் விக்­கி­ர­ம­சிங்க தரப்­பினர் 'புதிய அர­சி­ய­மைப்­பினை கொண்­டு­வ­ரு­வ­தற்கு அனை­வரின் ஆத­ர­வையும் பெறு­வ­தற்கு முயற்­சிக்­கின்றோம்' என்று சர்­வ­தே­சத்­திற்கு காண்­பித்து கொண்­டி­ருக்க விளை­கின்­றார்கள். சுதந்­தி­ரக்­கட்­சியில் மைத்­திரி அணி­யினர் 'புதிய அர­சி­ய­மைப்­புக்கு ஆத­ரவு என்றும் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை நீக்­கத்­திற்கு எதிர்ப்பு என்றும்' பல விட­யங்­களில் இரட்டை வேடம் போட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆக, மொத்­தத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பு என்ற விட­யத்­தினை வைத்து மேற்­கொள்­ளப்­படும் ஒரு அர­சியல் சூது விளை­யாட்டே நடை­பெ­று­கின்­றது. கூட்­ட­மைப்­பினர் தமிழ் மக்­க­ளையும், ராஜ­பக் ஷ, மைத்­திரி தரப்­பினர் சிங்­கள மக்­க­ளையும், ஐ.தே.க.வினர் மேற்­கு­ல­கத்­தி­னையும் ஏமாற்­று­கின்­றார்கள் என்­பதே யதார்த்தம். 

கேள்வி:- உங்­க­ளு­டைய கருத்தின் பிர­காரம் புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று உரு­வாக்­கப்­ப­ட­மாட்­டாது என்­கின்­றீர்­களா?

பதில்:- இந்தப் பாரா­ளு­மன்ற காலத்தில் செயற்­பாட்டு ரீதி­யாக முன்­னெ­டுக்க முடி­யாத நிலை­மை­களே உள்­ளன. 

கேள்வி:- உண்­மை­யான நிலைமை­களை மக்கள் மத்­தியில் கொண்டு செல்­ல­வேண்­டிய கடப்­பாடு 

உங்களது கட்­சிக்கும் உள்­ள­தல்­லவா? 

பதில்:- நிபு­ணர்கள் குழுவின் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்ட போது மஹிந்த ராஜ­பக் ஷ  அர­சி­ய­ல­மைப்பு சட்­ட­மூல வரைவு எங்கே என்று கோரினார். ஆனால் விகா­ரை­க­ளுக்குச் சென்று இல்­லாத அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ராக கருத்­துக்­களை கூறு­கிறார். சிங்­கள மக்கள் மத்­தியில் பீதியை உரு­வாக்­கு­கின்றார். இன­வா­தத்­தினை தூண்­டு­கிறார். அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் தமிழ் மக்கள் மத்­தியில் பொய்­யு­ரைக்­கின்­றது. இந்த இரண்டு நிலை­மை­க­ளின்­போதும் நாம் எதிர்ப்­புக்­களை வெளி­யிட்­டது மட்­டு­மன்றி தெளி­வு­ப­டுத்­தல்­க­ளையும் உரிய முறையில் வழங்கத் தவ­ற­வில்லை. அதனைத் தொடர்ந்தும் முன்­னெ­டுக்கத் தயங்­கப்­போ­வ­து­மில்லை. 

கேள்வி:- நாட்டில் ஜன­நா­ய­கத்­தினை நிலை­நாட்­டு­வ­தற்­காக கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட சிறு, சிறு­பான்மை தரப்­புக்­க­ளுடன் கைகோர்ப்­ப­தற்கு முன்­வந்­தி­ருந்த ஜே.வி.பி., அத்­த­ரப்­புக்­க­ளுடன் இணைந்து தேசியப் பிரச்­சினை உள்­ளிட்ட விட­யங்­க­ளுக்கு தீர்­வினை எடுக்கும் முயற்­சி­களை முன்­னெ­டுக்க தயங்­கு­வது ஏன்?

பதில்;- நாங்கள் பொது­வான கலந்­து­ரை­யாடல் தளத்தில் பங்­கேற்­றி­ருக்­கின்றோம். 

கேள்வி:- அதனை தாண்­டிய நகர்வை மேற்­கொள்­ளா­தி­ருப்­பது ஏன்?

பதில்:- ஒக்­டோபர் 26 நெருக்­கடி ஏற்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் நாம் கூட்­ட­மைப்­புடன் பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்தோம். எம்­மைப்­போன்ற தரப்­புக்­களின் ஒத்­து­ழைப்­பு­ட­னான கலந்­து­ரை­யா­டல்­களின் பின்­ன­ணியில் தான் ஒரு­மித்த நாட்­டுக்குள் தீர்­வினைப் பெற முடியும் என்ற நிலைப்­பாட்­டிற்கு கூட்­ட­மைப்பு வந்­தி­ருக்­கின்­றது. அத்­த­கைய அந்­நி­யோன்ய கலந்­து­ரை­யா­டல்கள் எதிர்­கா­லத்­திலும் தொட­ரப்­படும். 

கேள்வி:- நீதி­மன்ற வழக்கின் ஊடாக வட­கி­ழக்­கினை பிரிப்­ப­தற்கு ஜே.வி.பி கார­ண­மாக இருந்­துள்­ளது என்ற விடயம் அர­சி­ய­லைத்­தாண்டி சாதா­ரண தமிழ் மக்கள் மத்­தியில் தற்­போதும் கறை­ப­டிந்­த­தாக இருக்­கின்­றதே?

பதில்:- தற்­போதும் வடக்கும், கிழக்கும் தனித்­த­னி­யாக இருக்க வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். அதில் எந்­த­மாற்­றமும் இல்லை. வடக்­கையும், கிழக்­கையும் இணைப்­ப­தென்­பது நியா­ய­மான விட­ய­மல்ல. 1987இல் இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில் ஒரு­வ­ரு­ட­க­ாலத்­திற்கு தற்­கா­லி­க­மாக வடக்கு, கிழக்­கினை ஜே.ஆர். இணைத்­தி­ருந்தார். அதன்­பின்னர் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடை­பெற்­றி­ருக்க வேண்டும். ஆனால் அவ்­வா­றா­ன­வொன்று நடை­பெற்­றி­ருக்­க­வில்லை. மேலும் அங்­குள்ள மக்கள் குழுக்­க­ளுக்­கி­டையில் வேறு­பட்ட நிலைப்­பா­டுகள் உள்­ளன. அவ்­வா­றான நிலையில் வடக்கு, கிழக்கு இணைப்­பா­னது தவ­றா­னது. ஆகவே தான் அவற்றைப் பிரிக்க வேண்டும் என்று கோரினோம். தற்­போதும் அந்த நிலைப்­பாட்­டி­லேயே உள்ளோம். 

கேள்வி:- தேசி­யப்­ பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண வேண்­டு­மாயின் 13ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை அடிப்­ப­டை­யாக கொண்டு முன் ­ந­கர வேண்டும் என்­பது பொதுப்­ப­டை­யாக இருக்­கின்­றது. அவ்­வா­றான நிலையில் இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்­தினை கைவிட்டுச் செல்ல முடி­யா­தல்­லவா? 

பதில்:- 13ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை சுற்­றிச்­சுற்றி இருந்தால் தேசிய பிரச்­சி­னைக்கான தீர்­வினை ஒரு­போதும் பெற்­றுக்­கொள்ள முடி­யாத நிலை­மையே தொடரும். சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்கள் என்ற தேசி­ய­பே­த­மின்றி அனை­வரும் இலங்­கை­யர்கள் என்ற அடிப்­ப­டையில் சம­உ­ரி­மைகள் வழங்­கப்­பட வேண்டும் என்­பதே எமது கொள்­கை­யாகும். மாகாண சபைகள் இயங்­கு­வ­தாலோ முத­ல­மைச்சர் நிய­மிக்­கப்­ப­டு­வ­தாலோ வடக்கு மக்­க­ளுக்கு தீர்வு கிட்­டப்­போ­வ­தில்லை. அமைச்­சுப்­ப­த­வியை தொண்­ட­மா­னுக்கு வழங்­கு­வதால் மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைத்து விடாது. 

மாகாண சபைகள், ஆளு­நர்கள் ஆகி­ய­வற்­றுக்­கான அதி­கா­ரங்கள், ஒத்­தி­சைவுப் பட்­டியல் போன்­ற­வற்­றுக்­கான கலந்­து­ரை­யா­டல்­களில் நாம் பங்­கேற்­றுள்ளோம். அவை தொடர்ந்தும் கலந்­து­ரை­யா­டப்­பட வேண்­டிய விட­யங்­க­ளா­கின்­றன. எனினும் தேசிய இன­வே­று­பா­டு­களைத் தாண்டி நாட்டின் பிர­ஜைகள் என்ற அடிப்­ப­டையில் சமத்­துவ உரி­மைகள் அளிக்­கப்­ப­டு­வதே பிர­தா­ன­மா­கின்­றது என்று நாம் கருது­கின்றோம். 

கேள்வி:- தற்­போ­தைய அர­சியல் சூழலில் இந்­தப்­பா­ரா­ளு­மன்ற ஆயுட்­கா­லத்­தினுள் நிறை­வேற்று அதி­கா­ரத்­தினை முற்­றாக ஒழிப்­பதை மையப்­ப­டுத்­திய 20ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை நிறை­வேற்ற முடியும் என்று நம்­பிக்கை கொண்­டி­ருக்­கின்­றீர்­களா?

பதில்:- நாம் இந்த விட­யத்­தினை தொடர்ச்­சி­யாக வலி­யுறுத்­தியே வந்­துள்ளோம். அந்தச் சவா­லான பய­ணத்தின் ஓர் அங்­க­மா­கவே 19ஆவது திருத்­தச்­சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. எனினும் எமது இலக்­கினை நாம் அடை­ய­வில்லை. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மை­யினை ஒழிப்­ப­தாக கூறியே பத­விக்கு வந்தார். இருப்­பினும் அதனைச் செய்­வதில் பின்­ன­டிப்­புக்­களை செய்து வரு­கின்றார். தற்­போது நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மை­யினை அறி­மு­கப்­ப­டுத்­திய ஐ.தே.க.வே அதனை முற்­றாக நீக்கி பாரா­ளு­மன்­றத்­திற்கு அதி­கா­ரங்­களை வழங்க வேண்டும் என்ற நிலைப்­பாட்­டினை எடுத்­துள்­ளது. ஒக்­டோபர் 26இற்கு பின்­ன­ரான 52நாள் அனு­ப­வத்­துடன் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை இருக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­திய ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதி­யூதீன் போன்ற தரப்­பி­னரின் மன­

நி­லை­யிலும் மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்க முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளதால் பிர­தமர் தலை­மை­யி­லான பாரா­ளு­மன்­றத்­திற்கு அதி­கா­ரங்­களை வழங்கும் யோச­னையை ஆத­ரிப்பார் என்று கரு­து­கின்றோம். ஆகவே எம்மால் இயன்­ற­வ­ரையில் நாம் 20ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை நிறை­வேற்­று­வ­தற்கு முழு­மை­யான முயற்­சி­களை எடுப்போம். அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்­பிக்கை உள்­ளது. 

கேள்வி:- 20ஆவது திருத்­தத்­தினை நிறை­வேற்ற முடி­யாது போனால் உங்­க­ளி­டத்தில் மாற்­று­வழி உள்­ளதா? அது என்ன?

பதில்:- ஆம், நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை ஒழிக்கும் பிர­தான சுலோ­கத்­துடன் ஜனா­தி­பதித் தேர்­தலில் நாம் வேட்­பா­ளரை நிறுத்­துவோம். 

கேள்வி:- அவ்­வாறு கள­மி­றங்­கப்­போகும் வேட்­பாளர் யார்? பிர­தான கட்­சி­களின் சவாலை வென்று மக்கள் ஆணையைப் பெற­மு­டி­யுமா?

பதில்:- 20ஆவது திருத்­தத்­தினை நிறை­வேற்­றவே முழு முயற்சி எடுப்போம். அது இய­லாது போனாலே வேட்­பா­ளரை நிய­மிப்போம். வேட்­பாளர் யார் என்­பது குறித்து தற்­போது கூற­மு­டி­யாது. பிர­தான கட்­சி­களின் செயற்­பா­டுகள் குறித்து மக்கள் அதி­ருப்­தி அடைந்­துள்ள நிலையில் எமது நியாயமான நேர்மையான கருத்துக்கு மக்கள் ஆணை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலை நடத்தவேண்டும் என்று ஐ.தே.க.தரப்பும், பொதுத்தேர்தலை நடத்தவேண்டும் என்று மைத்திரி-, மஹிந்த தரப்பும் கோருகின்ற நிலையில் ஜே.வி.பி.யின் எதிர்பார்ப்பு என்னவாக உள்ளது?

பதில்:- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்படுகின்றபோது ஜனாதிபதி பாராளுமன்றத்திலிருந்தே தெரிவு செய்யப்படுவார். ஆகவே ஜனாதிபதித் தேர்தல் அவசியமில்லை. அடுத்து 6மாகாண சபைகளுக்கான ஆயுட்காலம் நிறைவுக்கு வந்துள்ளது. ஏனையவற்றின் ஆயுட்காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவுக்கு வருகின்றது. ஆகவே அனைத்து மாகாண சபைகளுக்கான தேர்தலையும் ஒரேதருணத்தில் காலந்தாழ்த்தாது நடத்த வேண்டும்.

கேள்வி:- பிரதான தரப்புக்கள் இரண்டும் பரந்து பட்ட கூட்டணி அமைப்பதற்கு தயாராகி வருகின்ற நிலையில் ஜே.வி.பி. ஏதாவது ஒரு தரப்புடன் கைகோர்ப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளதா?

பதில்:- ஒருபோதும் இல்லை, இரண்டு தரப்பாக இருந்தாலும் அவற்றுக்கு ஒரே கொள்கைகளே காணப்படுகின்றன. ஆகவே இந்த இரண்டு அதிகாரமோக தரப்புக்கும் எதிராக மாற்று அணியாகவே நாம் களமிறங்குவோம். நாம் அரசியல் கட்சிகளை கூட்டிணைக்காது, சமூக அமைப்புக்கள், துறைசார்ந்த தரப்பினர், புத்திஜீவிகள், தொழிற்சங்க அமைப்புக்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து பரந்து பட்ட கூட்டணியை அமைத்தே போட்டியிடவுள்ளோம்.

1994ஆம் ஆண்டின் பின்னரான தேர்தல்களில் ஐ.தே.க, மற்றும் சு.கவினால் தனித்து ஆட்சியமைக்க முடியாத சூழலே இருக்கின்றது. இதனால் தான் கூட்டணிகளை அவை அமைத்து வருகின்றன. தற்போது மக்கள் இந்த அரசியல் தரப்புக்களின் செயற்பாடுகளால் வெறுப்படைந்துள்ளனர். அவர்கள் மாற்றத்தினை எதிர்பார்க்கின்றார்கள். அந்த மாற்றத்திற்கான தலைமைத்துவத்தினை நாம் வழங்குவதற்கு தயாராகவுள்ளோம். 

( நேர்காணல் - ஆர். ராம் )