எலிபன்ட் ஹவுஸ் நெக்டோ “இளைஞர் பான வர்த்தக நாமம்” இணை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் விருதுகள் 2016 வழங்கலின் போது இந்த விருது எலிபன்ட் ஹவுஸ் நெக்டோ வர்த்தக நாமத்துக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதிகளவு விரும்பப்படும் வர்த்தக நாமத்துக்கு, அண்மையில் புதிய போத்தலில் புதிய சந்தைப்படுத்தல் செயற்பாடுகளுடன் மீள அறிமுகம் செய்யப்பட்டிருந்ததைத் தொடர்ந்து இந்த விருது கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் (SLIM) மற்றும் நீல்சன் கம்பனி ஆகியவற்றின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் விருதுகள் என்பதன் மூலமாக, நுகர்வோரின் தெரிவுகள் பதிவு செய்யப்பட்டு, அதிகளவு தெரிவைப் பெற்ற நாமங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
பொது மக்கள் இந்த வெற்றியாளர்களை தெரிவு செய்கின்றமையால், தமக்கு விருப்பமான வர்த்தக நாமங்கள், நபர்கள், விளம்பரங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் போன்றவற்றை தெரிவு செய்திருந்தனர்.
வெற்றியாளர்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டிருந்த நேருக்கு – நேர் கருத்துக்கணிப்புகளை நீல்சன் மேற்கொண்டிருந்தது.
இதில் 15 – 60 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண் இரு பாலாரும் நாட்டின் சகல மாவட்டங்களிலிருந்தும் ஐந்து மாதங்களுக்கு இவ்வாறு நேர்காணல்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
எலிபன்ட் ஹவுஸின் வர்த்தக நாமம் இந்த உயர் விருதை பெற்றுக் கொண்டமை தொடர்பில் சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் பிஎல்சியின் பானங்கள் பிரிவின் தலைமை அதிகாரியும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பதில் தலைவருமான தமிந்த கம்லத் கருத்து தெரிவிக்கையில்,
“எலிபன்ட் ஹவுஸ் நெக்டோ என்பது அதிகளவு களிப்பை விரும்புவோரின் தெரிவுக்குரிய நாமமாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் எமது கடுமையான உழைப்புகளுக்கு இறுதியாக மக்கள் விருதுகளில் கவனிப்புக் கிடைத்துள்ளது.
மேலும், எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம், ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம் விருது” எமக்குக் கிடைத்துள்ளமை மூலமாக, எமது வர்த்தக நாமத்தில் வாடிக்கையாளர்கள்; கொண்டுள்ள அதிகளவு நம்பிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM