பிரான்ஸின் மிகவும் பழைமையான விடுதியில் ஏற்பட்ட தீ பரவால் இருவர் உயிரிழந்துள்ளனர். 

பிரான்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள பனிப்பிரதேசமான கோர்செவல் என்ற மலை கிராமத்தில் மிகவும் பழைமையான விடுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கி இருந்தனர்.

 நேற்று முன்தினம் இரவு விடுதியில் திடீரென தீ பரவலால் விடுதியில் தங்கி இருந்தவர்கள் அனைவரும் அலறிஅடித்துக்கொண்டு வெளியேறினர்.

சிலர் மாடியில் இருந்து குதித்து உயிர்பிலைத்தனர். எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி இருவர்  உடல் கருகி உயிர் இழந்தனர். இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்ததும் சுமார் 70 தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

குறித்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த 25 பேர் மீட்கப்பட்டு ஹெலிகொப்டர்கள் மூலம் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருபவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.