முதல்வர் உம்­மன்­சாண்­டி என்னை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­தார்

Published By: Raam

05 Apr, 2016 | 09:51 AM
image

கேர­ளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கடந்த 3 ஆண்­டு­க­ளுக்கு முன் கைது செய்­யப்­பட்ட சரிதா நாயர் சில மாத சிறை வாசத்­திற்கு பின்னர் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்டார்.

2013ஆம் ஆண்டு கைதான போது தன்­னிடம் இர­க­சிய இடத்தில் விசா­ரணை நடத்த வேண்டும் என்று கோரிக்ைக விடுத்தார். அதற்கு நீதி­பதி சம்­ம­தித்தார். இதை­ய­டுத்து நீதி­மன்­றத்தில் பூட்­டப்­பட்ட அறைக்குள் சரிதா நாய­ரிடம் நீதி­பதி விசா­ரணை நடத்­தினர். விசா­ர­ணையின் போது முதல்வர் உம்­மன்­சாண்டி, முன்னாள் மத்­திய அமைச்­சர்கள் மாநில அமைச்­சர்கள் உட்­பட பலர் தன்னை பாலியல் துஷ்­பி­ர­யோகம் ெசய்­த­தாக குறிப்­பிட்டார். அதை எழுத்து மூலம் அளிக்க நீதிபதி கூறினார். அதற்கு சரிதா சம்­ம­தித்தார், இதன் பிறகு சரிதா நாயரை 5 நாள் காவலில் விசா­ரிக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது. பொலிஸ் காவலில் இருந்­த­போது 2013 ஜூலை 19ஆம் திகதி சரிதா, நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்ய ஒரு கடிதம் எழு­தினார். ஆனால் அந்த கடி­தத்தை பின்னர் நீதி­மன்­றத்தில் அவர் தாக்கல் செய்­ய­வில்லை.

அந்த கடி­தத்தில் பல அதிர்ச்­சி­ய­ளிக்கும் தகவல் இருப்­ப­தாக பர­ப­ரப்­பாக பேசப்­பட்­டது. இந்­நி­லையில், சரிதா எழு­திய அக் கடி­தத்தை நேற்று முன்­தினம் ஒரு மலை­யாள தொலைக்­காட்­சிக்கு வெளியிட்­டது. 25 பக்கம் கொண்ட அந்த கடி­தத்தில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:

முதல்வர் உம்­மன்­சாண்டி திரு­வ­னந்­த­பு­ரத்தில் உள்ள அரசு இல்­லத்தில் வைத்து என்னை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்தார். முன்னாள் மத்­திய அமைச்சர் ஒருவர், திரு­வ­னந்­த­பு­ரத்தில் ஒரு மாநில அமைச்சர் வீட்டில் வைத்து என்னை பாலியல்துஷ்பிரயோகம் செய்தார். மாநில உள்­துறை அமைச்சர் ரமேஷ் சென்­னித்­த­லாவின் உத­வி­யாளர் என்னை மத்­திய அமைச்­சர்­களின் இச்­சைக்கு இணங்க கட்­டா­யப்­ப­டுத்­தினார். இவ்­வாறு கடி­தத்தில் கூறப்­பட்­டுள்­ள­தாக அந்த தொலைக்­காட்சி தெரி­வித்­தது. இந்த கடி­தத்தை எழு­தி­யதை சரிதா நாயர் ஒப்புக் கொண்­டுள்ளார். கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ள சம்­ப­வங்கள் அனைத்தும் உண்­மைதான் என்றும் அவர் உறுதி செய்­துள்ளார்.

சரிதா நாயரின் குற்­றச்­சாட்டு குறித்து முதல்வர் உம்­மன்­சாண்டி கூறி­ய­தா­வது: கடந்த சில வரு­டங்­க­ளா­கவே எனது அரசை கவிழ்க்க எதிர்க்­கட்­சி­யினர் பல­முறை முயற்­சித்­தனர். இது அவர்­க­ளது கடைசி முயற்சியாகும். கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது எதுவும் உண்மை கிடையாது. தேர்தல் நேரத்தில் இது ெவளி வந்ததின் பின்னணியில் சிலரின் சதி திட்டங்கள் உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08