அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடவுள்ளார்

அத்துடன் கமலா ஹாரிஸ் உட்பட இதுவரை எட்டு பேர் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் இருக்கின்றனர்.

கலிஃபோர்னியா மாகாணத்தின் செனட்டராக கடந்த 2016 ஆம் ஆண்டு கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் பதவியையும் கமலா வகித்துள்ளார்.

இது தொடர்பில் தனியார் தொலைக்காட்சியில் பேசிய அவர், தான் தனது நாட்டை மிகவும் நேசிப்பதாகவும், நாட்டின் நலனுக்காக நான் போராடுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கமலா ஹாரிஸின் தாய் சியாமளா கோபாலன் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.