ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலொன்றில் நூற்றிற்கும் மேற்பட்ட ஆப்கான் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

மைடன் வர்டாக் பிராந்தியத்தில் உள்ள இராணுவ பயிற்சி முகாமிற்குள் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் காரணமாக 126 பேர்கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இராணுவசோதனை சாவடி மீது காரை மோதி தாக்குதலை ஆரம்பித்த தீவிரவாதிகள் பின்னர் இராணுவ பயிற்சி தளத்தின் முக்கிய கட்டிடம் மீது மற்றொரு காரை மோதி தாக்குதலை மேற்கொண்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குண்டுதாக்குதல் இடம்பெற்ற பின்னர் உள்ளே நுழைந்த இரு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஆப்கான் படையினர் பலர் கொல்லப்பட்டுள்ளனர்

100ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதை மற்றொரு அதிகாரியும் உறுதி செய்துள்ளார்.

மருத்துவமனையில் 35 படையினரின் உடலை பார்த்தாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

பலர் கொல்லப்பட்டுள்ளனர் பல உடல்கள் காபுலிற்கு வந்துள்ளன என தெரிவித்துள்ள அவர் ஆப்கான் அரசாங்கம் உண்மையான எண்ணிக்கையை மறைக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்