அமெரிக்காவில் உலகின் அழகான நாய் என்ற பெயரை பெற்ற ‘பூ’ என பெயரிடப்பட்ட பொமரேனியன் வகையை சேர்ந்த நாய் இதயம் வெடித்து உயிரிழந்தது. 

உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்ற ‘பூ’ என பெயரிடப்பட்ட பொமரேனியன் வகையை சேர்ந்த நாய். அமெரிக்காவை வளர்க்கப்பட்டு வந்த குறித்த நாய் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம் வாய்ந்தது.

இந்த ‘பூ’ வின் பெயரில் ‘பேஸ்புக்’ ‘இன்ஸ்ட்ராகிராம்’ போன்றவற்றில் தொடங்கப்பட்ட பக்கங்களை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள். இந்த சமூக வலைத்தள பக்கங்களில் ‘பூ’ வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தினசரி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு குறித்த நாய் இறந்தது. 

12 வயதான ‘பூ’ தூங்கிக்கொண்டிருந்த போது இதயம் வெடித்து உயிரிழந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

 ‘பூ’ வின் நெருங்கிய நண்பனாக விளங்கி வந்த புட்டி என்கிற நாய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்தமை குறிப்பிடத்தக்கது.