ஆப்கானிஸ்தானின் மைடான் மாகாணத்தில் உள்ள சிறப்பு படையினர் அலுவலகத்தில் சிறப்பு படையினருக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்குமிடையே மோதல் சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 

மைடான் ஷார் நகரில் உள்ள இந்த சிறப்புப் படையினர் அலுவலகத்தின் வாசலில் இன்று காலை குண்டுகள் நிரப்பப்பட்ட காரை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்திய தலிபானியர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவாறு மேற்படி அலுவலகத்துக்குள் ஊடுருவ முயன்றனர். 

இதன்போது சிறப்புப்டை காவலர்களுக்கும் தலிபானியர்களுக்குமிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இதன்போது இரு தரப்பிலிருந்தும் 18 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் படுகாயமடைந்த சுமார் 30 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.