பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடம் 

Published By: Vishnu

21 Jan, 2019 | 07:34 PM
image

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிப் பட்டியில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி இந்தியா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி வீதத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த பட்டியலை சர்வதேச முகவாண்மை நிறுவனமான 'பி.டபிள்.யூ.சி' இப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு 7 ஆவது இடத்தில் இருந்த இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடம் பிடித்துள்ளது. 

அதேநேரத்தில் பிரான்ஸ் 6 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். அதனால் மக்களின் உழைப்பு காரணமாக உற்பத்தி திறன் அதிகரித்து பொருளாதார நிலை உயர்ந்துள்ளதாக பி.டபிள்யூ.சி. தெரிவித்துள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளாக இங்கிலாந்தும், பிரான்ஸும் முறையே 5 மற்றும் 6 ஆவது இடத்தில் இருந்தன. தற்போது ‘பிரக்ஸிட்’ பிரச்சனையில் இங்கிலாந்து உள்ளது. இதனால் பவுண்டு மற்றும் யூரோ நாணயங்களுக்கு இடையேயான மதிப்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இரு நாடுகளுமே சமமான மக்கள் தொகையை கொண்டது. இருப்பினும் நாணய மதிப்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக இங்கிலாந்தை 7 ஆவது இடத்துக்கு தள்ளிவிட்டு 6 ஆவது இடத்திலேயே பிரான்ஸ் தொடர்ந்து நீடிக்கிறது.

இந் நிலையில் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றத்துடன் அமெரிக்கா பணக்கார நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலும், சீனா 2 ஆவது இடத்திலும், ஜப்பான் 3 ஆவது இடத்திலும், ஜெர்மனி 4 ஆவது இடத்திலும் உள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47