(எம்.மனோசித்ரா)

மாகாண சபைகள் சிலவற்றுக்கான ஆயுட்காலம் நிறைவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதும், மீண்டும் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பசில்ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

சில மாகாண சபைகளுக்குகான ஆயுட்காலம் நிறைவடைந்து ஒன்றரை வருடங்கள் நிறைவடைந்துள்ளன.இன்னும் மூன்று மாகாண சபைகளுக்கான ஆயும்காலம் எதிர்வரும் மாதங்களில் நிறைவடையவுள்ளன.

இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலை மேலும் பிற்போடுவதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபடுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது என அவர் தெரிவித்தார்.