வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழிருந்த காணிகள், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட நான்கு பண்ணைகளுக்கு சொந்தமான காணிகள் ஆகியவற்றை விடுவிப்பதற்கான சான்றுப் பத்திரங்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்த மகா வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டதன் பின்னர், இராணுவத்தளபதியால் இந்த சான்று பத்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. 

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட சுமார் 264 ஏக்கர் தனியார் காணிகளும் அரசாங்கத்தின் கீழ் காணப்பட்ட நான்கு பண்ணைகளுக்கு சொந்தமான 1099 ஏக்கர் காணிகளையும் விடுவிப்பதற்கான சான்றுப் பத்திரங்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவால் இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. அவற்றை ஜனாதிபதி மாவட்ட செயலாளர்களிடம் கையளித்தார்.