ஜனாதிபதியின் முல்லைத்தீவு விஜயத்தின் போது அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களுக்கு நீதி கோரியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

வித்தியானந்தக் கல்லூரி தேசிய பாடசாலையில் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு வாரம் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு தமது எதிர்ப்பினை வெளியிடும் முகமாகவும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரியும் அவர்களுக்கான பதிலை கூறுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டிருந்தனர்.

பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸாரின் கெடுபிடிக்கு மத்தியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் அச்சுறுத்தல்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த ஆர்ப்பாட்டத்தினை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவர்களை இராணுவப் புலனாய்வாளர்களும் பொலிசாரும் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தல் விடுத்து இருந்ததோடு ஜனாதிபதி வருகை தந்த போது அவரவருக்கு அண்மையாக செல்லவிடாது பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

இருந்தபோதும் ஜனாதிபதி வருகை தந்த போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் விழுந்து புரண்டு கதறி அழுது தமது உறவுகளுக்கு நீதி வேண்டும் எனக்கோரி பதாதைகளை தாங்கி தமது ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

இருந்த போதிலும் ஜனாதிபதி இவர்களை கண்டும் காணாதவர் போல் சென்று சென்றதாகவும் தமது தமது கோரிக்கையை ஜனாதிபதி கேட்கவில்லை என்றும் தமது திரும்பிக் கூட பார்க்கவில்லை என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் காணும் 685 நாட்களாக போராட்டத்தை நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பந்தல் அமைந்திருக்கும் பகுதிக்கு சென்ற புலனாய்வாளர்கள் எனப்படுபவர்கள் நாளைய தினம் நீங்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள வேண்டாம் அவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டால் அனைவரையும் கைது செய்வோம் என தம்மை அச்சுறுத்தியதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி ஈஸ்வரி தெரிவித்தார்.

முல்லைத்தீவு புளியங்குளம் வீதியில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் முன்னெடுக்கப்பட்டது.