(ஆர்.யசி)

கடந்த கால அரசியல் நிலைமைகளை அவதானித்து வருகின்றேன், அத்துடன் அரசியல் பழிவாங்கலை எதிர்கொண்டும் பழக்கப்பட்டுவிட்டேன். ஆகவே இப்போதுள்ள அரசியல் நெருக்கடிக்கு எவ்வாறான தீர்வு அவசியம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். எனவே பொது வேட்பாளராக என்னை நியமித்தால் களமிறங்க தயாராக உள்ளேன் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக தெரிவித்தார்.

பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

நாட்டு மக்களுக்கு  என்ன செய்ய வேண்டும் என்ற நோக்கு என்னிடம் உள்ளது. அதேபோல் அரசியல்  பழிவாங்கல் மற்றும் அரசியலில் நல்லவை கெட்டவை  என அனைத்திற்கும் முகங்கொடுத்த நபர் என்ற வகையில் நான் அதனை சரியாக கையாள தெரியும்.