மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது இன்று(21) திங்கட்கிழமை 133 ஆவது நாளாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.

தொடர்ச்சியாகவும் மன்னார் மனித புதை குழியில் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டும் அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றன.

மன்னார் மனித புதைகுழியிலிருந்த அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி குறித்த மனித எச்சங்கள் எந்த காலப்பகுதியில் புதைக்கப்பட்டவை? மரணம் நிகழ்ந்தது எவ்வாறு? என்பது தொடர்பாகவும் 

குறித்த புதை குழி இயற்கையான மாயனமா ? அல்லது கொடுரமாக கொல்லப்பட்டு குறித்த புதைகுழியினுள் புதைக்கப்பட்டனரா? என்பது தொடர்பான ஆய்வுக்காக மனித எலும்பு கூட்டு மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு ஆய்வுக்காக அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை (22) மன்னார் மனித புதைகுழி ஆய்வு பணி மற்றும் அகழ்வு பணி தொடர்பாகவும் ஆய்வுக்கு செல்லும் குழு மற்றும் ஆய்வு விபரங்கள் தொடர்பாகவும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.