ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தமது குழு­விற்கு ஆட்­களைக் கவர்ந்­தி­ழுக்கும் நோக்கில் புதிய காணொளிக் காட்­சி­ யொன்றை வெளி­யிட்­டுள்­ள னர்.

அந்தக் காணொளிக் காட்சி உலகில் மிகவும் தேடப்­பட்டு வரும் தீவி­ர­வா­தி­யான ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவின் தலைவர் அபூ­பக்கர் அல் பக்­தா­தியின் செய்­தி­யொன்­றையும் உள்­ள­டக்­கி­யுள்­ளது.

தீவி­ர­வா­தி­களால் நடத்­தப்­பட்ட குண்டுத் தாக்­கு­தல்கள் மற்றும் தலையைத் துண்­டித்து நிறை­வேற்­றப்­படும் மர­ண­தண்­டனைக் காட்­சி­களும் அந்தக் காணொளிக் காட்­சியில் காண்­பிக்­கப்­ப­டு­கின்­றன.

"இறை­வ­னுக்கு நன்றி செலுத்த அடி­மை­யொ­ரு­வ­ராக மாறுங்கள்" என அழைப்பு விடுக்கும் அந்தக் காணொளிக் காட்சி, இறை­வனின் அடி­மை­க­ளாக மாறு­வ­தற்கு ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவில் இணைந்து கொள்­வது அவ­சியம் என அறி­வு­றுத்­து­கி­றது.

"மோதல்­களில் ஈடு­பட்டு இறக்கும் தீவி­ர­வா­திகள் இறைவனுடன் ஐக்கியமடைந்து அமைதி பெறுவர்'' என என அந்தக் காணொளிக் காட்சி கூறுகிறது.