சுற்­றுச்­சூ­ழலைப் பாது­காக்க குளிப்­ப­தற்கு தடை விதிக்க வேண்டும் எனத் தெரி­வித்து சுவீடன் மன்­ன­ரான கார்ல் 16 ஆம் கஸ்டப் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.

இது தொடர்பில் சுவீடன் பத்­தி­ரி­கை­யான சவென்ஸ்­கா டக்­பி­ளேடட் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.


சுற்­றுச்­சூ­ழலைப் பாது­காப்­பதில் தீவிர கவனம் செலுத்தி வரும் 69 வய­தான மன்னர் கஸ்டப், குளி­யலின் போது பெரு­ம­ளவு நீரும் சக்­தியும் விர­ய­மா­வது தனக்கு பெரிதும் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் அதனால் அனைத்து வகை­யான குளி­யல்­க­ளையும் தடை செய்ய வேண்டும் எனவும் தெரி­வித்தார்.


மேற்­படி சக்தி விர­யத்தைத் தடுக்க அவர் அண்­மையில் குளியல் வச­தி­யில்­லாத இடத்தில் தங்­கி­யி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


1972 ஆம் ஆண்டில் சுவீ­ட­னினில் இடம்­பெற்ற முத­லா­வது ஐக்­கிய நாடுகள் சுற்­றுச்­சூழல் மாநாட்டில் பங்­கேற்ற மன்னர் கஸ்டப், எதிர்­வரும் 30 ஆம் திக­தி­யி­லி­ருந்து டிசம்பர் 11 ஆம் திகதி வரை பாரிஸ் நகரில் இடம்பெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்திலும் கலந்து கொள்ள வுள்ளார்.