மட்டக்களப்பு  மீராவோடை பிரதேச வைத்தியசாலைக்கு புதிய அம்பியுலன்ஸ் வழங்கும் நிகழ்வு நேற்றுமாலை இடம்பெற்றது.

வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினால் ஏற்பாடு செய்யப்ட்ட நிகழ்வில் சமூக வலுவூட்டல் இராஜங்க அமைச்சர் செயிட் அலிசாஹீர் மௌலான,பிரதம அதிதியதக கலந்து கொண்டார்.

இராஜங்க அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார இராஜங்க அமைச்சர் பைசல் காசீம் அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட அம்பியுலன்ஸ் உத்தியோக பூர்வமாக வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கோறளைப்பற்று மேற்க்கு பிரதேச சபை தவிசாளர் ஜ.ரி.அமிஸ்டீம்,வைத்தியர்கலான எச்.எம்.எம். முஸ்தபா,எஸ்.ஜ.மர்சூர்,ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர் எஸ்.ஜ.சேகுஅலி,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.எல்.எம்.ஹனிபா ஆகியோர்கலள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.