இலங்கை மற்றும் போலாந்துக்கிடையில் அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்களை அதிகரிப்பது தொடர்பில் தமது நாடு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் போலாந்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்களை அதிகரிப்பது தொடர்பில் போலாந்து ஜனாதிபதி என்ரிஸ்டூ டோ  (Andrezej Duda) க்கும் அந்நாட்டுக்கான இலங்கை தூதுவர் சி.ஏ.எச்.எம்.விஜயரட்னவுக்குமிடையில் கலந்துரயைாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

போலாந்துக்கான இலங்கை தூதுவர் தனது தூதுவர் நியமனம் தொடர்பான சான்றிதழை போலாந்து ஜனாதிபதியிடம் கையளித்த போது இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போதே போலாந்து ஜனாதிபதி மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைவரும் போலாந்து சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்துவருவதாகவும் இலங்கைதூதுவர் இதன்போது என்ரிஸ்டூ டோவிடம் எடுத்துரைத்தார்.