ஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்

Published By: Vishnu

21 Jan, 2019 | 03:11 PM
image

முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாகன தொடரணி முல்லைத்தீவு - புளியங்குளம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, கோடலிக்கல்லு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவில் இடம்பெற்ற போதைப்பொருள் தொடர்பான நிகழ்வு மற்றும் பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துகொள்ள சென்றிருந்தார்.

விபத்து இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக சென்ற இராணுவ கோமாண்டோ படையணியே பாதுகாப்பு பணியை நிறைவு செய்துவிட்டு வவுனியா பகுதி நோக்கி வருகைதந்தவேளை இவ் விபத்தில் சிக்கியுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தே விபத்துக்காகியுள்ளதுடன் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டிகளில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும் விபத்தில்  காயமடைந்தவர்களில் இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் குறித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37