இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு கெளரவப்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தமையை அடிப்படையாகக் கொண்டே ஐ.சி.சி. தோனியின் படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

இந் நிலையில் தோனியின் ரசிகர்கள் அப் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதவிட்டு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.