சிவாஜிலிங்கத்தை  ஏன் விசாரிக்கவில்லை

Published By: MD.Lucias

05 Apr, 2016 | 09:34 AM
image

புலம்பெயர் அமைப்புகளின் ஆதரவால் ஆட்சிக்குவந்த அரசாங்கம் அதற்கு கைமாறாகவே சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி பதவி வழங்கியுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

சாவகச்சேரியில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி கொழும்புக்கு கொண்டுவருவதற்கு பதுக்கி வைக்கப்பட்டது என கூறிய ஜீ.எல். பீரிஸை அரசாங்கம் விசாரணை செய்தது. ஆனால் தெற்கில் இருப்பவர்கள் தான் இதனை செய்திருக்கின்றனர் என கூறிய சிவாஜிலிங்கத்தை அரசாங்கம் ஏன் விசாரணை செய்யவில்லை எனவும் அவர்  கேள்வியெழுப்பினார்.

புத்திஜீவிகள் மற்றும் நிபுணத்துவர்களின் குரல் அமைப்பு கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

அரசியலமைப்பை மீறும் வகையிலேயே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரதமர் நாட்டுமக்களை முட்டாள் ஆக்கும் வகையில் இதனை நியாயப்படுத்த முயற்சிக்கிறார். அதனால் தான் அரசாங்கத்துக்கு எதிராக முட்டாள்கள் தினமான கடந்த 1ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்தோம்.  

அரசாங்கம் தேசிய அரசாங்கம் என்ற பேரில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அரசியலமைப்புக்கு முரணாக உயர்த்திக்கொண்டுள்ளது. 19ஆவது திருத்தத்துக்கமைய அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஆகவும் பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 40ஆகவும் இருக்க வேண்டும். என்றாலும் தற்போது 88வரை உயர்ந்துள்ளது. பிரதமர் இதனை தேசிய அரசாங்கம் என கூறி நியாயப்படுத்துகிறார். அரசியலமைப்பின் பிரகாரம் தேசிய அரசாங்கம் என்பதானது  பெரும்பான்மை ஆசனங்களை பெற்ற கட்சி ஒன்று ஏனைய சகல அரசியல் கட்சிகளுடன் இணைந்து அமைப்பதை குறிக்கும்.  

பாராளுமன்றத்தில் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட 6 அரசியல் கட்சிகளே இருக்கின்றன. கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கே அதிக ஆசனங்கள் கிடைத்தன. அடுத்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆசனங்கள் கிடைத்தன. . ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஐக்கிய தேசிய முன்னணியுடன் தனித்து ஒப்பந்தம் செய்துகொள்ள முடியாது. அப்படி செய்வதென்றால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கீகாரம் இருக்க வேண்டும். ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பிரதான 4கட்சிகளில் 3கட்சிகள் தேசிய அரசாங்கத்துக்கு எதிரானவையாகும். 

அத்துடன் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சிகளில் ஒரு ஆசனம் மாத்திரம் இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம் தான் தேசிய அரசாங்கத்துக்குள் இருக்கின்றது. எனவே அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதற்காக ஒரு ஆசனம் மாத்திரம் இருக்கும் கட்சியை இணைத்துக்கொண்டு தேசிய அரசாங்கம் அமைத்திருப்பதை ஏற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் இது பிழையானதோர் முன்னுதாரணமாக அமையும் அபாயம் ஏற்படலாம்.

மேலும் புலம்பெயர் அமைப்புகளின் ஆதரவால் ஆட்சிக்குவந்த அரசாங்கம் அதற்கு கைமாறாக சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி பதவி வழங்குவதற்காக சுதந்திர கட்சியை அரசாங்கத்துக்குள்  இணைத்துக்கொண்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவாகவே செயற்பட்டது. ஆனால் தேசிய அரசாங்கத்தில் இணைய வில்லை. அத்துடன் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் புலம் பெயர் தமிழ் அமைப்புகளை திருப்தி படுத்தும் வகையிலேயே இருக்கின்றன.

சாவகச்சேரியில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி இராணுவத்தின் புலனாய்வு பிரிவினால்  கண்டெடுக்கப்பட்டதல்ல. எதிர்ப்பாக்காத வகையில் கண்டுபிடிக்கப்பட்டதாகும். புலனாய்வு பிரிவினர் இன்று முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சாவகச்சேரியில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி கொழும்புக்கு கொண்டுவருவதற்காக பதுக்கி வைக்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார். இதற்காக  குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அவர் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். ஆனால் தெற்கில் இருப்பவர்கள் தான் அந்த தற்கொலை அங்கியை இங்கு வைத்து அரசாங்கத்தை  ஸ்திரமற்ற நிலைக்கு ஆளாக்க முயற்சித்துள்ளனர் என வடமாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியிருந்தார். ஆனால் அரசாங்கம் ஏன் அவரை அழைத்து விசாரக்க வில்லை?.

நாங்கள் 30வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக புலிகளுக்கு உதவி செய்து வந்த பல புலம்பெயர் அமைப்புகள்  தமிழ் இணையத்தளம் மற்றும் புலிகளுடன் தொடர்பு பட்ட 440பேரை தடை செய்திருந்தோம். ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்து வந்ததுடன் இந்த தடைகள் நீக்கப்பட்டன. அத்துடன் ஜனாதிபதி புலிகளின் தலையை தடவி அவர்களை விடுதலை செய்கின்றார். ஆனால் பயங்ரவாதத்தை ஒழித்த இராணுவத்தினர் சிறையில் அடைக்கப்படுகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50