(எம்.நியூட்டன், நாகர்கோவில்)

பொலிகண்டி கந்தவனம் திருவருள் மிகு கல்யாண வேலவ சுவாமி கோவில் கருங்கற் திருப்பணி பிரதம குரு சிவ பிரமசிறி வைத்திய நாதக் குருக்கள் தலையிலான சிவாச்சாரியார்களால் இன்று திங்கட்கிழமை (21.01.2019) காலை 9 மணிமுதல் 9:45 மணிவரை உள்ள சுப வேளையில் நடாத்தப்பட்டது. 

இந்த கருங்கற் திருப்பணி நிகழ்வு இந்தியாவின் திருவாவடுதுறை ஆதீனம் குரு திருச்சிற்றம்பலம் தம்பிரான் சுவாமிகள் திரு முன்னிலையில் இடம் பெற்றது.

இவ்வாலயமானது இலங்கையின் சிரசென விளங்கும் வடமராட்சி பகுதியில் புண்ணிய திருத்தலங்களில் ஒன்றாகவும் முற்காலத்தில் கந்தப் பெருமானால் வேதாரணியத்திலிருந்து கடல் மிசை மரக்கலத்தில் ஆரோகணம் செய்து பொலிகண்டி வன்னி வனமாகவிருந்த இடத்தில் இளைப்பாறி கந்தவனம் எனும் திருத்தளி அமைத்து இங்கு நான்முகன் மகாவிஸ்ணு இந்திரன் ஆகிய நதேவர்களால் மகா அபிஷேகம் செய்து வழிபட அவர்களுக்கு நல்லருள் பாலித்து அருள் கூர்ந்த பெருமையுடைதும் அருணகிரிநாதரால் உறவு சிங்கிகள் எனும் திருப்புகழால் திருவாய மலர்ந்து போற்றிட பாடப்பெற்றது. 

ஈழத்து ஆறுபடை வீடுகளில் ஒன்றாகவும் கண்டகீ வடகாந்தரம் சம்மோத கிரி சமனாசலம் முதலிய பருசவ கேத்திரங்களில் ஒன்றாயும் தக்கண கைலாய புராணம் விதந்துரைப்பதும் சிக்கல் எட்டிக்குடி எண்கண் முதலிய தலங்களில் உள்ள ஆறு முகரை வடித்த தெய்வீக சிற்பி சில்ப்ப முனிவரால் கைக் குழச்சுக்குள் உளி வைத்து வடிக்கப்பட்ட கல்யாண வேலவ சுவாமி எனும் பழைய சண்முகர் மூலவ சண்முகர் திவ்விய ரூபமும் தனக்கு நிகரில்லாத பேரழகுமுடைது ஆறுமுகநயினார் எனும் மூன்று சண்முகர்கள் ஒருங்கே இந்திர மயிலிலமர்ந்து அருளாட்சி செய்யும் சிறப்புடையதும் காஞ்சி மாங்களியூடு குழந்தைப் பேறளிக்கும் சிறப்புடைதும் கற்பூரம் விளைவித்த புனிதம் வாய்ந்த நறுநீர்க் கேணியுடையதும் ஞானியர்கள் சித்தானைக்குட்டி பெரியானைக்குட்டி செல்லப்பா சுவாமிகள் சிவயோக சுவாமிகள் அருளம்பலம் சுவாமிகள் நயினாதீவு முத்துக்குமார சுவாமிகள் முதலிய சித்தர்கள் வழிபாடு செய்த. தொன்மை உடையதுமான பொலிகண்டி கந்தவனம் திருவருள் மிகு கல்யாண வேலவர் சுவாமி கோவிலிற்க்கே இன்று கருங்கற் திருப்பணி இடம்பெற்றது.

இத்திருப்பணிக்கு உதவ விரும்புபவர்கள் 8108079762 எனும் கொமர்சல் வங்கி நெல்லியடி கணக்கு இலக்கம் ஊடாக உதவ முடியுமென தர்மகர்த்தாக்கள் தெரிவித்தனர். இவ் அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு சிறப்பிக்க கலாநிதி ஆறு திருமுகன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், மாணகா முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் உட்பட அப்பகுதிப் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .