புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், இரண்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களுடன் கிளிநொச்சி, பளைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கரந்தை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் அமைந்து பயங்கரவாத புலனாய்வு பிரிவிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 2 துப்பாக்கிகளும் 150 தோட்டாக்களும் மற்றும் பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.