வெளி­நா­டு­களில் உள்ள எண்ணெய் நிறு­வ­னங்­களில் சட்ட விரோ­த­மாக முத­லீடு செய்­துள்­ள­வர்கள் பட்­டி­யலை பனாமா சட்ட நிறு­வ­னத்­திடம் இருந்து பெற்று மொசாக் பன்­சிகா என்ற நிறு­வனம் வெளி­யிட்­டுள்­ளது. இதில் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்­வர்யா ராய், டி.எல்.எப். குழு­மத்தின் குடும்­பத்தைச் சேர்ந்த 9 பேர் உள்­ளிட்ட 500 க்கும் மேற்­பட்டோர் இடம்­பெற்­றுள்­ளனர்.

கடந்த ஆண்டு ஜெனி­வாவின் ஹச்.எஸ்.பி.சி. வங்­கியில் இர­க­சிய கணக்கு வைத்­துள்ள 1100 இந்­தி­யர்­களின் பட்­டி­யலை சுவிட்­சர்­லாந்து வெளி­யிட்­டது. இதனால் வெளி­நா­டு­களில் கறுப்பு பணம் பதுக்­கி­ய­வர்கள் விவ­காரம் பெரும் சர்ச்­சையை ஏற்படுத்தியது. இந்­நி­லை­யில. தற்­போது, எண்ணெய் நிறு­வ­னங்­களில் சட்ட விரோ­த­மாக முத­லீடு செய்­துள்­ள­வர்­களின் பட்­டி­யலை பனாமா சட்ட நிறு­வ­னத்­திடம் இருந்து பெற்று மொசாக் பன்­சிகா வெளி­யிட்­டுள்­ளது. உலகம் முழு­வ­திலும் உள்ள ஒன்­றரை கோடிக்கும் அதி­க­மா­ன­வர்­களின் இர­க­சிய ஆவ­ணங்­களும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யர்கள் தவிர ரஷ்ய ஜனாதிபதி விளா­டிமிர் புடின், பாக்., முன்னாள் பிர­தமர் பெனாசிர் புட்டோ, பாக்.,ன் தற்­போ­தைய பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.