'1990 சுவசெரிய' இலவச அம்பியூலன்ஸ் சேவை இன்று முதல் சப்ரகமுவ மாகாணத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் தாராள நன்கொடையுடன், 2016 ஜூலை 29 ஆம் திகதி மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்ட இச் ச‍ேவையானது, இலங்கை வாழ் மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வரப் பிரசாதமாகும்.

இந்த சேவை 2018 ஜூலை மாதத்தில் வட மாகாணத்திற்கும், ஆகஸ்ட் மாதத்தில் ஊவா மாகாணத்திற்கும், செப்டெம்பர் மாதத்தில் வட மத்திய மாகாணத்திலும், ஒக்டோபர் மாதத்தில் வட மேல் மாகாணத்திலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

1990 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம்  இதுவரை 811,739 அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதற்காக 145,106 தடவைகள் அம்பியூலன்ஸ் வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது சுமார் 12.58 நிமிடத்தில் நோயாளர்களை அண்மித்து, அவசர சிகிச்சை தேவைப்படும் 131,282 நோயாளர்களை வைத்தியசாலைக்கும் அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.