நிரந்தர விலாசம் மனிதனின் மிகமுக்கிய தேவைகளின் ஒன்றாகும் . பணம் படைத்தவர் தொடங்கி மிகக்குறைந்த வருமானம் ஈட்டுவோர் வரை சொந்த வீடு, காணி என்ற ஆசை எப்பொழுதும் இருக்கும். ஆனால் இக்காலக்கட்டத்தில் நாமாகவே காணியை வாங்கி வீடு கட்டுதல் என்பது முடிந்த காரியம் என்றாலும் மிகவும் சிரமமானதாகும். 

உங்கள் கவலைகளை போக்கவும் கனவுகளை நனவாக்கவும் எப்பொழுதும் நம்பிக்கையுடன் தொழில்புரியும் A & D Property Developers (Pvt) Ltd நிறுவனத்தினர் காத்திருக்கின்றனர்.

A & D Property Developers (Pvt) Ltd நிறுவனத்தினரின் அண்மைக்கால திட்டமாக கொழும்பில் மிகவும் ஆடம்பரமான சொகுசு Glorious Residencies தொடர்மனைக் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது (BOI) முதலீட்டு பணியகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வேலைத்திட்டமாகும். அத்தோடு இத்திட்டத்தை நகரின் மத்தியில் சகல அத்தியாவசிய வசதிகளும் நிறைந்த கால்நடை தூரத்திற்குள் இல.167, ஸ்ரீமத் பண்டாரநாயக்க மாவத்தையில் இந்த சொகுசு தொடர்மாடி குடியிருப்பு மனை அமைந்துள்ளது.

அதுமாத்திரமன்றி இத்தொடர்மனைகள் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு 2, 3 மற்றும் 4 படுக்கை அறைகள் கொண்ட மனைகளாக 82 ஆடம்பர குடியிருப்பு மனைகளும் மற்றும் பென்த்தவுஸ்களும் (Penthouses) Smart Home Concept திட்டத்தின் கீழ் மிகவும் நவீனமான முறையில் அமைந்துள்ளது.

குறிப்பாக இலங்கையின் முன்னணி உட்கட்டமைப்பு, பல்பிரிவு பொது ஒப்பந்தக்காரரான International Construction Consortium (Pvt) Ltd (ICC) நிறுவனத்தினர் Glorious Residencies  இன் பிரதான ஒப்பந்தக்காரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் The Pinnacle Consortium (Pvt.) Ltd என்ற புகழ்பெற்ற கட்டிடக்கலை நிறுவனத்தின் பங்களிப்புடன் Glorious Residencies புத்தாக்க வடிவமைப்புகளுக்கும் சர்வதேச தரங்களுக்கும் நன்கு பிரசித்தி பெற்ற கட்டிட கலைஞர்களால் இக்குடியிருப்பு மனைகள் வடிவமைக்கப்பட்டுள்ளமை சிறப்புக்குரியாகும்.

மேலும் அடித்தளம், முதலாவது, இரண்டாவது மாடிகள் நவீன முறையிலான கார்தூக்கி முறைமையில் ஒரே தடவையில் 110க்கு மேற்பட்ட வாகனங்களை நிறுத்தக் கூடிய கார் தரிப்பிட வசதிகளுடன் இடைத்தளம் முழுவம் வணிக நிறுவனங்கள் அலுவலகங்களை வைத்திருப்பதற்கும் மாநாடு, கூட்டம், வைபவங்கள் ஆகியவற்றை நடத்துவதற்காக பல்செயற்பாட்டு சாலை ஒன்றும் அமைக்கப்படும். விசேடமாக தரைமாடி Cargills Food city, food court ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏனைய அம்சங்களில் கூரை உச்சி தோட்டம், முழு அம்சங்களும் அடங்கிய உடற்பயிற்சி கூடம், சிறுவர்கள் / வயது வந்தவர்களுக்கான நீச்சல் தடாகம், பயணிகள் மின்தூக்கிகள், Intercom System, PEO TV Connection, individual Wi Fi வலையமைப்புடன் பொருத்தப்படவுள்ளதுடன் தயார் நிலையிலான மின்பிறப்பாக்கி மற்றும் 24 மணிநேர CCTV கண்காணிப்பு சேவைகள் ஆகியனவும் ஏற்படுத்தப்படவுள்ளன.

குடியிருப்பு தொகுதி 2019 பெப்ரவரியில் பூர்த்தி அடையும் வகையில் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளமையால் இந்நிறுவனத்தினர் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு இப்போதே வீட்டு சாவிகளை வழங்கி வருகின்றனர். நீங்களும் இந்த சொகுசு மனையின் பெருமைக்குரிய உரிமையாளராகி சொகுசு வாழ்க்கை முறையை அனுபவிக்கலாம். தற்போது Glorious Residencies மட்டுப்படுத்தப்பட்ட வீடுகளே உள்ளமையால் நேரத்தை வீணடிக்காமல் அரியதொரு முதலீட்டு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Glorious Residencies பெருமையும் வசதியுமான பெருநகர சொகுசு வாழ்க்கை முறையை உங்களுக்கு தருகிறது.