கேகாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் தப்பிச் சென்றுள்ளார்.

திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரிலேயே நேற்று இவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் இவரை பொலிஸார் கைதுசெய்யும் போது பொது மக்களினால் தாக்கப்பட்ட நிலையில் அவர் கேகாலை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையிலேயே அவர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.