ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றை ஒன்ணைத்து கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

யார் எந்த விமர்சனங்களையும் முன்வைத்தாலும் நாம் அவற்றை கவனத்தில்கொள்ளமாட்டோம். புதிய கூட்டணி ஒன்றை அமைக்க வேண்டும் என இரு கட்சித் தலைவர்களும் உறுதியாக உள்ளனர்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கு எதிராக தமது ஆட்சேபனைகளை தெரிவித்து வருகின்றனர்.  

மேலும் குறித்த குழுவினர் தேர்தலை அறிவிக்கும் காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்த குழுவினரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் அமையவுள்ள கூட்டணிக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.