மத்திய மாகாண ஆளுனர் அம்பகமுவ பிரதேசசபைக்கு தீடிர் விஜயம் 

Published By: Vishnu

21 Jan, 2019 | 01:08 PM
image

மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குனரத்ன நேற்று அம்பகமுவ பிரதேச சபைக்கு திடிர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

 

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கும் முகமாவும், மஸ்கெலியா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை மஸ்கெலியா மற்றும் நல்லதண்ணி ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்த ஆளுநர் அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

நல்லதண்ணி பகுதிக்கு சென்ற அவர், சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் திடீர் சுகயினமுற்றால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் முகமாக தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு, மஸ்கெலியா வைத்தியசாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் வைத்தியசாலையின் பிரதான வைத்தியரிடம் கேட்டறிந்ததோடு, அதனை உடனடியாக தீர்க்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மஸ்கெலியா பிரதேச சபை தலைவர் செண்பகவள்ளி, அம்பகமுவ பிரதேச சபை தலைவர் ஜயசிங்க பெரேரா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத...

2025-03-25 11:00:58
news-image

மீட்டியாகொடையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-03-25 10:48:17
news-image

நாட்டில் சில பகுதிகளில் எட்டரை மணிநேரம்...

2025-03-25 10:42:16
news-image

'மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு...

2025-03-25 10:47:57
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில்...

2025-03-25 10:23:00
news-image

சம்மாந்துறையில் மனித பாவனைக்குதவாத குளிர்பானம் கைப்பற்றல்...

2025-03-25 10:23:54
news-image

நாட்டின் பல பகுதிகளில் மிதமான நிலையில்...

2025-03-25 10:03:41
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு : மற்றொரு...

2025-03-25 09:34:05
news-image

ஐரோப்பா செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக இலங்கைக்குள்...

2025-03-25 09:24:21
news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை :...

2025-03-25 09:29:20
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33