சேனா படைப்புழுவின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார். 

அதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விவசாய செய்கையானது முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பின் அதை முழுமையாக தீயிட்டு எரிக்குமாறும் விவசாய அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

இதேவேளை சேனா படைப்புழுவை ஒழிப்பதற்காக மாவட்ட மாட்டத்தில் விவசாய மத்திய குழு, கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குழு மற்றும் மாவட்டக் குழு போன்ற மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.