"போதையிலிருந்து விடுதலையான நாடு "என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன்  தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது. 

இந்நிலையில் குறித்த நிகழ்வின் ஏற்பாட்டுப் பணிகளை  பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் அ ங்கு மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு  ஜனாதிபதி நாளை முல்லைத்தீவில் அமைந்துள்ள முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு வருகைத்தருவதையிட்டு பெருமையடைகின்றேன்.

ஆனாலும் இந்தப் பாடசாலை மாணவர்களிடையே போதைவஸ்தினை ஒழிப்பதற்கு இவ்வாறான நிகழ்வு எவ்வளவு தூரம் வெற்றியழிக்கும் என்பது எனக்குச் சந்தேகமாக உள்ளது.

போதைவஸ்து கடத்தல் அதன் அதிகரிப்பு அதனோடு இணைந்த வடிசாராயம் அல்லது கசிப்பு உற்பத்தி அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. இதுவும் போதைவஸ்துடன் இணைந்த செயலாகத்தான் நான் கருதுகின்றேன் .இதனை ஏன் பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது என்பதை ஆராய்ந்தால்  வடிசாரயம் வடிக்கின்ற ஒரு வீட்டில் இருக்கின்றது என்று பொலிஸாருக்கு தகவல் கொடுத்தால் அதனை யார் தெரிவித்தார்கள் என்று திரும்ப அறிவிக்கின்ற நிகழ்வு வன்னியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

பொலிஸார் சரியான முறையில் நடவடிக்கையினை மேற்கொள்ளும் வரை போதை வஸ்து  நடவடிக்கையினை கட்டுப்படுத்த முடியுமா என்பது என்னுடைய கேள்வியாக இருக்கின்றது.

இவ்வாறான பெரும் எடுப்பில் தேசிய மட்டத்தில் மேற்கொள்கின்ற நிகழ்வுகள் அதில் வெற்றியடையக்கூடியதாக இருக்கவேண்டும் என்றால் அதனுடன் இணைந்த வகையில் இருக்கின்ற நிகழ்வுகளையும் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் பொலிஸார் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவேண்டும் என்பது வேண்டுகோளாக இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.