மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை முகாமை இலக்கு வைத்து தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்ட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாலியில் பயங்கரவாதச் செயல்களை ஒழிக்கவும், அமைதியை நிலைநாட்டவும் பிரசாரம் செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் அதிகமான பல நாடுகளைச் சேர்ந்த அமைதிப்படையினர் மாலியில் முகாமிட்டுள்ளனர். 

இந் நிலையில், மாலி நாட்டின் அகுவெல்ஹோக் என்ற இடத்தில் உள்ள ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது ஆயுதமேந்திவந்த மர்ம நபர்கள் இன்று நடத்திய தாக்குதலில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த 8 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.