(எம்.மனோசித்ரா)

ஹெரோயின், ஐஸ் மற்றும் கேரள கஞ்சா போன்ற போதைப்பொருட்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொம்பனி வீதி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலினடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடமிருந்து 15.35 கிராம் ஹெரோயின், 2.5 கிராம் ஐஸ் மற்றும் 540 கிராம் கேரள கஞ்சா ஆகியவை பொலிஸாரால் கைப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டுள்ளவர் 41 வயதுடைய, கொம்பனித் தெரு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.