உலகத்தையே உலுக்கிய பனாமா ஆவணங்கள் கசிவால் சர்வதேச அளவில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் பணச்சலவையில் ஈடுபட்டவர்கள் குறித்த விசாரணைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
நேற்று பனாமாவின் சட்ட நிறுவகத்தின் 11 மில்லியன் இரகசிய ஆவணங்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதில் உலகில் 70க்கும் மேற்பட்ட நாடுகளின் முன்னாள் மற்றும் தற்கால அரச தலைவர்கள் ,பிரபலங்கள் மற்றும் கோடீஸ்வரர்கள், சட்டவிரோதமாக தாங்கள் ஈட்டிய பணத்தின் விபரங்கள் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கசிந்த பனமா ஆவணங்களில் எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் ,லிபியாவின் முன்னாள் தலைவர் மொவுமுர் கடாபி மற்றும் சிரியாவின் ஜனாதிபதி பசீர் அல் அசாட் உள்ளிட்டவர்களின் பெயர்களும் மேலும் இந்தியாவின் நடிர்களான அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்றவர்களின் பெயர்களும் இதில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவிலும் இது அரசியல் ரீதியான பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு , இது குறித்த விசாரணைகளை நடத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM