இந்த ஆண்டின் கடந்த 16 நாட்களில்,  நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

கொழும்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலாக 625 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளார்கள். 

கம்பஹா மாவட்டத்தில் 180 நோயாளர்களும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 499 நோயாளர்களும்  அடையாளங்காணப்பட்டுள்ளதாக, தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இது தவிர, களுத்துறை, கண்டி, மாத்தறை,  ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளிகள்,  கூடுதலாக இனங்காணப்பட்டிருப்பதாகவும்,  தொற்று நோய்த்  தடுப்புப் பிரிவின் சமூக சுகாதார சிறப்பு நிபுணர் வைத்தியர் பிரஷீலா சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.