ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் கல்வி பயிலும் வசதிகுறைந்த மாணவர்களுக்கும் மகாபொல சகாய நிதியத்தினூடாக வழங்ப்பட்டு வரும் மானியம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

மேலும் இலங்கை உயர்தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்தினூடாக இதுவரை 1500 ரூபா வழங்கப்பட்டிருந்தை 2500 ரூபாவாக உயர்த்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஆறாயிரம் மாணவர்களுக்கு கிடைக்கின்றது. 

இது தொடர்பாக அறிவதற்கு இணையத்தளமொன்றை உடனடியாக ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். 

நாத்தாண்டியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.