(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைவாக நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'தேசிய போதைப்பொருள் தடுப்பு - பாடசாலை வாரம்' நாளை முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்படவுள்ளது. 

இதற்கான ஆரம்ப நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற உள்ளது. 

இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினை மேலும் பலப்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் ஆலோசனையின் கீழ் வடக்கு மாகாண பாடசாலைகளின் சுமார் 150,000 மாணவர்கள் நாளை காலை  போதைப்பொருளுக்கு எதிரான உறுதியமொழியினை மேற்கொள்ளவுள்ளனர்.