(எம்.மனோசித்ரா)

கோத்தபாய ராஜபக்ஷ தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கி தாராளமாக தேர்தலில் போட்டியிடலாம். அதற்கு எந்த தடையும் கிடையாது. எனினும் கல்வி கற்ற சிறந்த அறிவாற்றல் உடைய பலர் இந்த நாட்டில் காணப்படுகின்ற நிலையில் அவ்வாறனவர்களில் ஒருவருக்கு ஆதரவளிக்கவே தாம் தயாராகவுள்ளதாக பாரிய நகர் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். 

அத்துடன் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாலும் அதற்கும் நாம் தயாராகவே உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.