அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் நீக்கப்பட்டுள்ளார்.

நுவான் பிரதீப்பின் இடது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவர் இத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என இலங்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிக்கிடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.