நீதியை நிலைநாட்டுமாறு கோரி பொலிஸ் ஆணைக்குழுவிடம் இலங்கையிலுள்ள ஊடக அமைப்புகள் முறைப்பாடொன்றை முன்வைக்க தீர்மானித்துள்ளன.

ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்ட குற்றவாளிகள் சுதந்திரமாக செயற்படுவதை கண்டித்தே ஊடக அமைப்புகள் இந்த முறைப்பாடை முன்வைக்க தீர்மானித்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டை எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 10 மணிக்கு பொலிஸ் ஆணைக்குழுவில் முன்வைக்கவுள்ளனர்.

அத்துடன், அதே தினம் 10.30 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பிலுள்ள கிளை அலுவலகத்தில் இது தொடர்பில் ‘ஒன்லைன்’ மூலம் கையொப்பம் திரட்டப்பட்ட மனுவொன்றும் கையளிக்கப்படவுள்ளது.