பொலிவியாவில் இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி இடம்பெற்ற விபத்தில் 22 பேர் உயிரிழந்ததுடன், 37 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பொலிவியாவின் தலைநகர் லபாஸிலிருந்து சுமார் 250 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சல்லபாட நகரத்தில் வைத்தே குறித்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. 

இவ் விபத்து குறித்து சல்லபட்டா மேயர், விபத்துக்காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 37 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதானால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.