வென்னப்புவ, நைநாமடம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு-சிலாபம் வீதியில் வென்னப்புவ, நைநாமடம் பகுதியில் லொறி ஒன்றுடன் கார் மோதியே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற இவ் விபத்தின்போது காரில் பயணித்த 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.