மலையக பகுதிகளில் கட்டமைப்பு பணியில் காணப்படும் தனிவீட்டு திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்கும் செயற்பாடுகளை பற்றிய கலந்துரையாடல் அக்கரப்பத்தனை டயகம பகுதியில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவனேசன் அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர்கள் சிவானந்தன், சுதாகர் மற்றும் வட்டார அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது மக்களின் கருத்துக்களை கேட்டறிந்ததோடு அதற்கான தீர்வுகளை வழங்கியதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவனேசன் தெரிவித்தார்.