தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியலமைப்பை மாற்றியமைப்பதன் ஊடாக மக்களின் கவலைகளை தீர்க்க முடியாது. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டுமெனவும் தெரிவித்தார்.

கொழும்பில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில்கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க  மேற்கண்டவாறு தெரிவித்தார்.