புதையல் தோண்டிய ஐவரை, சியாம்பலாண்டுவைப் பொலிசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

சியாம்பலாண்டுவைப் பகுதியின் கல்லமுன என்ற இடத்தில் தனியார் காணியொன்றில் புதையல் தோண்டுவதாகக் கிடைத்த தகவலொன்றினையடுத்து, சியாம்பலாண்டுவைப் பொலிசார் குறிப்பிட்ட இடத்தை சுற்றிவளைத்து புதையல் தோண்டிய ஐவரையும் கைது செய்தனர். 

அத்துடன், அவ்விடத்திலிருந்த கார் ஒன்றும், ஆட்டோ ஒன்றும் பொலிசாரினால் மீட்கப்பட்டதுடன், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பெருந்தொகையான உபகரணங்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர், சியாம்பலாண்டுவை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று பொலிசார் தெரிவித்தனர்.