பெண்களின் வன்முறைகளுக்கெதிரான கைப்பட்டி போராட்டம் இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது.

 

மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒன்றியமான இணையம் காவ்யா பெண்கள் அமைப்புடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.

மட்டக்களப்பு மஹாத்மா காந்தி பூங்காவில் ஆரம்பமான போராட்டம் மட்டக்களப்பின் பல இடங்களிலும் நடைபெற்றன.

வீதிகளில் பயணிக்கும் பொதுமக்கள் நிறுத்தப்பட்டு அவர்களது கைகளில் பெண்களின் வன்முறைக்கெதிராக செயற்படுவோம் எனும் வாசகம் அடங்கிய கைப்பட்டி அணிவிக்கப்பட்டது.

பெருமளவிலான தமிழ், முஸ்லிம் பெண்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்